மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.

Update: 2023-08-12 20:22 GMT


சிவகாசி அருகே உள்ள பெரிய குளத்து பட்டியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 19). இவர் விருதுநகர் அருகே உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது தந்தையின் மோட்டார் சைக்கிளுடன் கல்லூரிக்கு வந்த இவர் கல்லூரி மரத்தடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வகுப்புக்கு சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. இதுபற்றி சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்