மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு

தேனி அருகே மோட்டார்சைக்கிளை தீ வைத்து எரித்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-04-02 18:45 GMT

தேனி அருகே பூதிப்புரம் ராமகாரன் தெருவை சேர்ந்த ஊஞ்சல்ராஜ் மகன் மனோஜ்குமார் (வயது 23). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். கடந்த 31-ந்தேதி இவர் தனது வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். மறுநாள் அதிகாலையில் அவருடைய மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்தது. இதை அறிந்த அவர், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். மோட்டார் சைக்கிளுக்கு யார் தீ வைத்தார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து அவர் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்