மோட்டார் சைக்கிள்-அரசு பஸ் மோதல்
பெரியகுளம் அருகே மோட்டார் சைக்கிளும், அரசு பஸ் மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 21). இவர் கைலாசப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தேனிக்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகன் சக்திவேல் பாண்டியன் (11) சென்றான். அப்போது சருத்துப்பட்டி அருகே கம்பத்திலிருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முனியாண்டி, சக்திவேல் பாண்டியன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து,விசாரணை நடத்தி வருகின்றனர்.