ஸ்ரீமுஷ்ணம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி

ஸ்ரீமுஷ்ணம் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிாிழந்தனா்.

Update: 2023-01-17 18:45 GMT

ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பேரூர் அருகே உள்ள கூட்டாம்பள்ளி குளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முருகேசன் (வயது 21). இதேபோல் பாளையங்கோட்டை கீழ்ப்பாதி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் முரளிக்கிருஷ்ணன் (வயது 26).

இவர்கள் இருவரும் நேற்று மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் ஸ்ரீமுஷ்ணம் சென்றனர். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டைக்கு புறப்பட்டனர்.

2 பேர் சாவு

கலியங்குப்பம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த பனை மரத்தில் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த முருகேசன், முரளிக்கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்