மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; கேபிள் டிவி. ஊழியர் பலி

திருவட்டார் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கேபிள் டி.வி. ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-01-29 18:45 GMT

திருவட்டார்:

திருவட்டார் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கேபிள் டி.வி. ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

கேபிள் டி.வி. ஊழியர்

திருவட்டார் அருகே உள்ள திருவரம்பு பயற்றுவிளாகம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் அனிஷ் (வயது26). இவர் கேபிள் டி.வி. நிறுவனத்தில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார்.

அனிஷ் நேற்று முன்தினம் இரவு திருவட்டாரில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கொல்வேலில் உள்ள திருவட்டார் பேரூராட்சி அலுவலகம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் நின்ற மின்கம்பத்தில் மோதியது. இதில் அனிஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

பரிதாப சாவு

அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்