மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் பலி

விக்கிரமசிங்கபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் பலி-மகன் படுகாயம்

Update: 2022-06-06 21:58 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவருடைய மனைவி முத்துக்கனி (42). இவர்களுடைய மகன் சுரேஷ். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய தாயாருடன் மோட்டார் சைக்கிளில் காய்கறி வாங்குவதற்காக சென்றார். சிவந்திபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் பலத்த காயமடைந்த முத்துகனியை அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த சுரேசுக்கு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்