சென்னிமலையில் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மகன் பிரவீண்குமார் (வயது 24). இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். பிரவீண்குமார் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் சென்னிமலையில் உள்ள ஊத்துக்குளி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேலப்பாளையம் பகுதியில் ரோட்டு ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வேன் மீது பிரவீண்குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரவீண்குமாருக்கு படுகாயம் ஏற்பட்டது.
பின்னர் உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பிரவீண்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி.டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று பிரவீண்குமார் இறந்துவிட்டார். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள