லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்:அனல்மின்நிலைய ஊழியர் சாவு

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அனல்மின்நிலைய ஊழியர் இறந்து போனார்.

Update: 2023-06-01 18:45 GMT

தூத்துக்குடி கேம்ப்-2 பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 51). இவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் போர்மேனாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார். அவர் புதிய துறைமுகம் ரோடு காதர்மீரான் நகர் அருகே சென்ற போது, எதிர்பாராதவிதமாக அங்கு நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்