கள்ளக்குறிச்சியில் ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதல் பள்ளி மாணவர்கள் 2 பேர் காயம்
கள்ளக்குறிச்சியில் ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் காயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் வரதராஜன். ஆட்டோ டிைரவரான இவர் சம்பவத்தன்று மாலை தனக்கு சொந்தமான ஆட்டோவில் பள்ளி மாணவ-மாணவிகள் 5-க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு துருகம் சாலை வழியாக கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஆட்டோ மீது மோதியது. இதில் பள்ளி மாணவர்களுடன் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8-ம் வகுப்பு மாணவரும், 6-ம் வகுப்பு படிக்கும் மாணவியும் காயமடைந்தனர். காயமடைந்த 2 பேரும் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு சென்றனர். ஆட்டோ டிரைவர், மற்ற மாணவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் லேசான காயத்துடன் தப்பினார். இந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.