ரெயில்வே கேட் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; டிரைவர் பலி

ரெயில்வே கேட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் டிரைவர் பலியானார்.

Update: 2023-05-25 20:07 GMT

பணகுடி:

பணகுடி அருகே உள்ள அமச்சி கோவிலை சேர்ந்த சேர்ந்தவர் முத்தையா மகன் அருண் (வயது 36). டிரைவரான இவர் அதே ஊரைச் சேர்ந்த டேவிட் மகன் ஆனந்த் (32) என்பவருடன் நேற்று மாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். தெற்கு வள்ளியூர் ரெயில்வே கேட் பகுதியில் சென்ற போது, கேட் மூடி இருந்ததை கவனிக்காமல் ரெயில்வே கேட்டில் மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனந்த் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்