மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு
தக்கலை:
தக்கலை பழைய பஸ் நிலைய பகுதியில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் 2 மோட்டார் சைக்கிள்கள் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அவருடன் வந்த அதே ஊரை சேர்ந்த கவின் என்பவர் படுகாயமடைந்த நிலையில் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.
படுகாயமடைந்த கவினின் சட்டை பையில் அடையாள அட்டை இருந்தது. இதனை வைத்து அவருடைய பெயர் உடனடியாக தெரிந்தது. மேலும் இதுதொடர்பாக தக்கலை போலீசார், பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.