மோட்டார் சைக்கிள்கள் மோதல் கார் மெக்கானிக் சாவு
திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் கார் மெக்கானிக் பரிதாபமாக இறந்தார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.
பள்ளிபாளையம்:
திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் கார் மெக்கானிக் பரிதாபமாக இறந்தார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
திருச்செங்கோட்டை அடுத்துள்ள சித்தாளந்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமாா் (வயது 21). ஈரோட்டில் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். ஜெயக்குமார் நேற்று காலை திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஆலாம்பாளையத்தில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், ஜெயக்குமார் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
பரிதாப சாவு
இதில் காயம் அடைந்த ஜெயக்குமாரை, பள்ளிப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார். எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த பள்ளிபாளையம் முனியப்பன்நகர் பகுதியை சேர்ந்த லோகு (33) என்பவரும் காயம்அடைந்தார்.
லோகுவுக்கு பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தினர்.