சேத்தியாத்தோப்பு அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

சேத்தியாத்தோப்பு அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-09-13 17:52 GMT


சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள துறிஞ்சிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர்கள் தனிஷ்லாஸ் மகன் ஸ்டாலின் (வயது 35), ஜான்சுந்தர்(43). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் சேத்தியாத்தோப்பில் இருந்து சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மிராளுர் பெட்ரோல் பங்க் அருகே வந்த போது, அப்பகுதியில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஸ்டாலின், ஜான்சுந்தரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் ஸ்டாலின் இறந்து விட்டார். ஜான்சுந்தருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்