விஜயமங்கலம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு

விஜயமங்கலம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு

Update: 2023-08-23 20:34 GMT

பெருந்துறை

திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன் பாளையம் அருகே உள்ள கூனம்பட்டி ஆலம்பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் அருண் (வயது 25). கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு அருண் செங்கப்பள்ளியில் இருந்து விஜயமங்கலத்தை நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

கோவையில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் விஜயமங்கலம் பிரிவு அருகே சென்றபோது ரோட்டு ஓரமாக லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த அருண் லாரி நிற்பதை பார்த்ததும், திடீரென பிரேக் போட்டு மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார். ஆனாலும் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது.

விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட அருண் தரையில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு, சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அருண் உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்