தியாகதுருகம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; போலீஸ்காரர் படுகாயம்

தியாகதுருகம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ்காரர் படுகாயமடைந்தாா்.

Update: 2023-06-12 18:45 GMT

தியாகதுருகம், 

கள்ளக்குறிச்சி அருகே ராயர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராதாகிருஷ்ணன் (வயது 35). போலீஸ்காரரான இவர் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கணிணி பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சொந்த வேலையாக தியாகதுருகம் சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டார். தியாகதுருகம் அடுத்த வீரசோழபுரம் சுங்கச்சாவடி அருகே வந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது இவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்