பொள்ளாச்சியில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்;பெயிண்டர் சாவு
பொள்ளாச்சியில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்;பெயிண்டர் சாவு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, ராஜா மில் ரோடு ஆரோக்கியநாதர் வீதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 34).் பெயிண்டர். நேற்று வினோத் மோட்டார் சைக்கிளில் வடக்கிபாளையத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்தார். ஆர்.பொன்னாபுரம் ரோட்டோரம் நின்றிருந்த லாரியின் பின் பக்கத்தில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வினோத்தை அக்கம் பக்கத்தில் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு வினோத்தின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.