லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி
லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
வேட்டவலம்
லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
வேட்டவலத்தை அடுத்த ஜமீன் அகரம் கிராமத்தை சேர்ந்த முனியன் மகன் மணிகண்டன் (வயது 37). இவர் அதே பகுதியில் ஊராட்சி மன்ற டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது தம்பி முரளிராஜுடன் இருசக்கர வாகனத்தில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா மழவந்தாங்கல் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார்.
வேட்டவலம் பேரூராட்சி அலுவலகத்தின் அருகே வந்தபோது அநற்த பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த மணிகண்டன் படுகாயம் அடைந்தார். பின்னால் அமர்ந்திருந்த முரளிராஜுக்கு சிறிய காயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த மணிகண்டனை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து வேட்டவலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.