அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; ஓட்டல் உரிமையாளர் பலி

இலுப்பூர் அருகே அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஓட்டல் உரிமையாளர் பலியானார்.

Update: 2022-10-25 18:19 GMT

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே புங்கினிப்பட்டியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் ராஜாராம் (வயது 21). இவர் இலுப்பூரில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். ராஜாராம் தனது மோட்டார் சைக்கிளில் இலுப்பூர்-புதுக்கோட்டை சாலையில் நவம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டையில் இருந்து மணப்பாறை சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக ராஜாராம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ராஜாராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜாராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்