மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலி

செம்பனார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலி

Update: 2023-08-30 18:45 GMT

திருக்கடையூர்:

புதுச்சேரி வாணரப்பேட்டை பிரான்சுவா தோப்பை சேர்ந்தவர் அழகப்பன் மகன் மணிகண்டன் (வயது 19). இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவுக்கு சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். செம்பனார்கோவில் அருகே பூம்புகார் மெயின் ரோடு குரங்குபுத்தூரில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மணிகண்டன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்