மோட்டார் சைக்கிள்- கார் மோதல்; வாலிபர் சாவு

தேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளும், காரும் மோதிக் கொண்டதில் வாலிபர் ஒருவர் பலியானார்.

Update: 2022-10-05 19:30 GMT

தர்மபுரி மாவட்டம் நெடுமாறன் நகரை சேர்ந்த சந்தோஷ் (வயது 20). இவரும், அதே ஊரை சேர்ந்த நண்பர் ஹரி (20) என்பவரும் சேர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் கொடைக்கானல் சுற்றுலா சென்றனர். மோட்டார் சைக்கிளை சந்தோஷ் ஓட்டி சென்றார். பெரியகுளம்-வத்தலக்குண்டு ரோட்டில் காட்ரோடு அருகே வந்த போது கம்பத்தில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் கம்பத்தை சேர்ந்த கார் டிரைவர் சரவணக்குமார் (48) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்