மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; வாலிபர் சாவு

கடலூர் அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.

Update: 2023-08-19 19:18 GMT

நெல்லிக்குப்பம்,

கடலூர் துறைமுகத்தை சேர்ந்தவர் மொய்தீன் அப்துல் காதர் (வயது 25). இவர் நேற்று மாலை கடலூர் அடுத்த டி.குமராபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த காரும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த மொய்தீன் அப்துல் காதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான மொய்தீன் அப்துல் காதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்