வாலிபர் பலி

முத்துப்பேட்டை அருகே மரத்தில் மோட்டார் சக்கிள் மாதி வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2022-06-17 16:49 GMT

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டை அருகே மரத்தில் மோட்டார் ைசக்கிள் ேமாதி வாலிபர் உயிரிழந்தார்.

திருமணத்துக்கு சென்றார்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவருடைய மகன் ராஜா(வயது22). டிப்ளோமா படித்துள்ள இவர் தற்போது திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.இந்தநிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த ராஜா ஒரு திருமணத்துக்கு சென்று விட்டு எம்.கே. நகர் ஆற்றாங்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதியது.

பரிதாப சாவு

இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்