மோட்டார் சைக்கிள் திருட்டு

தஞ்சையில் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-08-05 20:41 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை விளார் சாலை நியூபாத்திமா நகரை சேர்ந்தவர் அஜய் (வயது 23). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். பின்னர் வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தாா். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குபதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்