தாயின் தற்கொலை முயற்சி; சிசுவின் உயிரை பறித்தது

தாயின் தற்கொலை முயற்சி; சிசுவின் உயிரை பறித்தது

Update: 2023-01-24 19:20 GMT

வளநாட்டை அடுத்த அக்குலம்பட்டியை சேர்ந்தவர் ஐஸ்வார்யா. இவரது கணவர் கிருஷ்ணன். இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 4 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் ஆன ஐஸ்வர்யா தான் கர்ப்பம் தரித்து இருப்பதை கணவரிடம் கூறிய போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் மனைவியை கணவன் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யாவிற்கு 7 மாத பெண் சிசு இறந்த நிலையில் பிறந்தது. இது தொடர்பாக ஐஸ்வர்யாவின் தாய் மின்னல்கொடி அளித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்