மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தாய்-மகன் படுகாயம்
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தாய்-மகன் படுகாயம் அடைந்தனர்.
கரூர் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே காந்திநகர் 2-வது தெரு பகுதியை சேர்ந்தவர் ஓமந்தூர். இவரது மனைவி செல்லம்மாள் (வயது 60). இந்த தம்பதியின் மகன் பெரியசாமி (37). இந்தநிலையில் பெரியசாமி தனது மோட்டார் சைக்கிளில் தாய் செல்லம்மாளை அழைத்துக்கொண்டு கட்டிட வேலைக்காக புகழூர் அன்னை நகர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மூலிமங்கலம் பிரிவு சாலையை கடக்கும்போது, அந்த வழியாக வந்த ஒரு கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெரியசாமி, செல்லம்மாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, நிற்காமல் சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.