3 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

3 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-07-28 17:14 GMT

வேலூர் கஸ்பா பயர்லைன் பகுதியை சேர்ந்தவர் சிட்டிபாபு. இவருடைய மனைவி வெங்கடேஸ்வரி (வயது 33). இவர்களுக்கு கனீஸ்கர் (15), பிரீத்தி (13) மற்றும் 10 மாத பெண் குழந்தை உள்ளனர். கூலிதொழிலாளியான சிட்டிபாபு கடந்தாண்டு இறந்து விட்டார். இதையடுத்து வெங்கடேஸ்வரி அவருடைய தாயாருடன் வசித்து வீட்டுவேலைகள் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தாயாரும் இறந்து போனார். அதனால் கடும் மனவேதனையுடன் வாழ்ந்து வந்த வெங்கடேஸ்வரி கடந்த 22-ந் தேதி வீட்டில் தூக்கில் தொங்கினார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவிக்கு பின்னர் வெங்கடேஸ்வரி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள். 3 குழந்தைகளும் தவிக்க விட்டு விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்