2 குழந்தைகளின் தாய் தீக்குளிப்பு

பரங்கிப்பேட்டை அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளிப்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி

Update: 2022-06-08 17:53 GMT

பரங்கிப்பேட்டை

பரங்கிப்பேட்டை அருகே உள்ள பெரியகுமட்டிகிராமத்தை சேர்ந்தவர் சம்பத்குமார் மனைவி பானுப்பிரியா(வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது சம்பத்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்த பானுப்பிரியா திடீரென கேனில் இருந்த பெட்ரோலை தன் மீது தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் தீ வெப்பம் தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அனைத்து சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பானுப்பிரியாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பானுப்பிரியா சற்று மனம் நலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் இதன் காரணமாக அவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இருப்பினும் அவரது தற்கொலை முயற்சிக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்