2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
ஆரணியில் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணி,
ஆரணியில் 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணி அருணகிரி சத்திரம் கல்யாண சுந்தரனார் தெருவை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி பானுமதி (வயது 42). இவர்களுக்கு ஜனனி, பூஜா ஸ்ரீ என 2 மகள்கள் உள்ளனர் . கணவன், மனைவிக்கிடையே கடந்த சில தினங்களாகவே கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் மன அழுத்தம் அடைந்த பானுமதி வாழ்க்கையில் விரக்தி அடைந்து நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் விஜயன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்களின் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.
இது குறித்து ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.