கைக்குழந்தையுடன் தாய் மாயம்; போலீசார் விசாரணை

கைக்குழந்தையுடன் தாய் மாயம்; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-20 19:25 GMT

பனங்குளம் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் மதிமாறன் மகள் மகாதேவி (வயது 25). இவரது கணவர் தினேஷ்குமார். இவர்களுக்கு 8 மாத கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகாதேவி, தனது குழந்தையுடன், மதிமாறன் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து வீட்டில் இருந்த மகாதேவி, கைக்குழந்தையையும் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து மதிமாறன் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைக்குழந்தையுடன் மாயமான பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்