3 வயது குழந்தையுடன் தாய் மாயம்

3 வயது குழந்தையுடன் தாய் மாயமானார்.

Update: 2023-04-15 14:24 GMT

திருச்சி. எடமலைப்பட்டிபுதூர், செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். ஏ.சி. மெக்கானிக். இவரது மனைவி சரண்யா (வயது 21). இந்த தம்பதிக்கு ரிஸ்வந்திகா (3) என்ற மகள் உள்ளார். நேற்று முன்தினம் சரண்யா தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்