லாரி மோதி தாய் பலி; மகன் படுகாயம்

புளியங்குடியில் லாரி மோதி தாய் பலியானார். அவரது மகன் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-08-21 18:30 GMT

புளியங்குடி:

புளியங்குடியில் லாரி மோதி தாய் பலியானார். அவரது மகன் படுகாயம் அடைந்தார்.

தாய்-மகன்

தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சண்முகவேலு மனைவி மாரியம்மாள் (வயது 55). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

இதில் 3-வது மகன் முருகனுக்கு (33) நேற்று முன்தினம் கடையநல்லூர் அருகே உள்ள வடகரையில் 3-வதாக ஆண் குழந்தை பிறந்தது. தனது பேரனை பார்ப்பதற்காக மாரியம்மாள் நேற்று முன்தினம் வடகரைக்கு சென்றார்.

லாரி மோதி பலி

இந்த நிலையில் பேரனை பார்த்து விட்டு நேற்று அதிகாலையில் மாரியம்மாள் தனது மகன் முருகனுடன் மோட்டார் சைக்கிளில் சுப்பிரமணியபுரத்திற்கு வந்து கொண்டு இருந்தார்.

புளியங்குடி டாஸ்மாக் கடை அருகே வந்த போது, அந்த வழியாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். முருகன் படுகாயம் அடைந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். முருகனை மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்