பேரக்குழந்தையுடன் மகள் மாயமானதால் தாய் தற்கொலை

சிவகாசியில் பேரக்குழந்தையுடன் மகள் மாயமானதால் தாய் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-15 21:18 GMT

சிவகாசி, 

சிவகாசியில் பேரக்குழந்தையுடன் மகள் மாயமானதால் தாய் தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தையுடன் பெண் மாயம்

சிவகாசி ரிசர்வ்லைன் இந்திராநகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் மகாலட்சுமி (வயது 28). இவருக்கும் எம்.கல்லுப்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சிவபாலன் (3) என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் திருப்பூருக்கு வேலைக்கு சென்ற கருப்பசாமி தனது மனைவி மகாலட்சுமி, மகன் சிவபாலன் ஆகியோரை சிவகாசி ரிசர்வ்லைனில் உள்ள மாமியார் பஞ்சவர்ணம் வீட்டில் விட்டு, விட்டு சென்றார். இந்த நிலையில் மகாலட்சுமி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தனது குழந்தையுடன் வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பஞ்சவர்ணம் (45) சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். மகள், குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியேறிய சம்பவத்தால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சவர்ணம் தற்கொலை குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்