செய்யப்பட்ட காலை உணவு திட்டjjம்

செய்யப்பட்ட காலை உணவு திட்டjjம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-25 11:54 GMT

தாராபுரம்

மாநிலம் முழுவதும் விரிவாகம் செய்யப்பட்ட காலை உணவு திட்டத்தை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆதிதிரவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்.தமிழ் நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகள் காலையில் வெறும் வயிற்றில் சென்று கல்வி கற்பதை நினைவில் கொண்டு தமிழ் நாடு முழுவதும் விரிவாகம் செய்யப்பட்ட காலை உணவு திட்டத்தை நேற்று 8மணிக்கு திருக்குவளை பகுதியில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.அந்த வகையில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலங்கியம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு டி.ஆர்.ஓ.ஜெய்பீம் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில் குமார் முன்னிலை வகித்தார்.அப்போது ஆதிதிரவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் தொடங்கி காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து தானும் குழந்தைகள் மத்தியில் அமர்ந்து உணவை உண்டு மகிழ்தார். பின்னர் அமைச்சர் கூறியதாவது, மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுக்கு ஊட்டிவிட்டதோடு, அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்காக "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் ரவை உப்புமா, சேமியா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா ஏதேனும் ஒன்றும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ரவை கிச்சடி, சேமியா, சோளம், கோதுமை கிச்சடியில் ஏதேனும் ஒன்றும், புதன்கிழமை ரவை அல்லது வெண் பொங்கல், வெள்ளிக்கிழமை மட்டும் ரவை அல்லது சேமியா கேசரியுடன் காய்கறி சாம்பாா் தினமும் வழங்கப்படும் என அமைச்சர் கயல்விழி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்