கருப்பு கொடி காட்ட முயன்ற 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கைது

கருப்பு கொடி காட்ட முயன்ற 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-04 20:29 GMT

திருச்சி புத்தூர் நால் ரோட்டில் தி.மு.க சார்பில் நடைபெறும் பொது கூட்டத்திற்கு ஆ.ராசா எம்.பி. வருகை தந்தார். இந்நிலையில் இந்து பெண்களை அவமதிக்கும் விதமாக ஆ. ராசா எம்.பி. பேசியதாக கூறி அவருக்கு கருப்பு கொடி காட்ட அவர் வரும் வழியில் பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் மற்றும் மகளிர் அணியினர் பறவைகள் சாலையில் கூடி இருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்களிடம் இருந்த கருப்பு கொடிகளை போலீசார் கைப்பற்றினர். இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கண்டோன்மெண்ட் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை கைது செய்து அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்