திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மில்லர்ஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (வயது 45). இவர், ஆரணி காந்தி ரோட்டில் காமராஜர் சிலை அருகே உள்ள பாத்திரக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று கடையின் முன்பு தனது ெமாபட்டை நிறுத்தியிருந்தார்.
பின்னர் வந்து பார்த்த போது மொபட் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு மற்றும் போலீசார் ஆரணி காந்தி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மொபட்டில் சந்தேகத்தின் பேரில் வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தியதில், வெம்பாக்கம் தாலுகா குத்தனூர் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி (43) என்பதும், பாத்திரக்கடையின் வெளியில் நிறுத்தியிருந்த மொபட்டை திருடியதும் தெரியவந்தது. உடனே போலீசார் முனியாண்டியை கைது செய்து, மொபட்டை பறிமுதல் செய்தனர்.