சாலை தடுப்பு சுவரில் மொபட் மோதி வாலிபர் பலி

சாலை தடுப்பு சுவரில் மொபட் மோதி வாலிபர் பலியானார்.

Update: 2023-07-04 20:23 GMT

திருச்சியை அடுத்த இனாம்புலியூர் நியூ நகர் நொண்டி தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 20). கொத்தனார். நேற்று காலை ராம்ஜிநகர் கள்ளிக்குடி சந்தை அருகே ரஞ்சித் மொபட்டில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் உள்ள தடுப்பு சுவரில் ரஞ்சித் மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்