கோவில்பட்டியில்மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக விழா
கோவில்பட்டியில்மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக விழா நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக 2-ம் ஆண்டு தொடக்க விழாவை யொட்டி ராஜீவ் நகர் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைவர் அன்புராஜ் தலைமை தாங்கினார். அன்னதானத்தை பிரேமா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் முனியசாமி, நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் ரவிக்குமார், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட பொறுப்பாளர் பேச்சி முத்து, ஒன்றிய செயலாளர் பொன்மாடசாமி, நகர செயலாளர் செல்லத்துரை, மகளிர் அணி முத்துலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.. முன்னதாக வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.