குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்

குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2022-08-17 14:03 GMT

கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் அ.கீதா தலைமை தாங்கினார். துணை தாசில்தார் சங்கர் வரவேற்றார். வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ''மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் இடதுபுற கால்வாய் பகுதிகளில் பாசன கால்வாய்கள் அமைத்துத் தரவேண்டும். நீர்நிலை உயர ஏரிக் கால்வாய்களைத் தூர்வாரி ஒழுங்குபடுத்த வேண்டும். தொல்லை கொடுத்து வரும் குரங்குகளைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்'' என விவசாயிகள் வலியுறுத்தினர்.

இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் கீதா உறுதி அளித்தார். முடிவில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்