திருக்குறுங்குடியில் வாழைகளை நாசம் செய்த குரங்குகள்
திருக்குறுங்குடியில் தோட்டத்துக்குள் குரங்குகள் புகுந்து வாழைகளை நாசம் செய்தன.
ஏர்வாடி:
திருக்குறுங்குடியில் இருந்து வனத்துறை சோதனை சாவடிக்கு செல்லும் சாலையில் செட்டியாபத்து பகுதியில் குரங்குகள் கடும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. அப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்து 100-க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்துள்ளன. வாழைகளின் குருத்துக்களை முறித்து போட்டுள்ளன.
இதனால் விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நாசமான வாழைகள் 3 மாதமே ஆன மட்டி ரக வாழைகள் ஆகும். எனவே அந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.