தனியார் பள்ளியில் பணம் திருட்டு

மேற்கூரையை பிரித்து தனியார் பள்ளியில் பணம் திருடப்பட்டது.

Update: 2022-07-06 14:49 GMT

வடமதுரை நேருஜிநகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், அய்யலூர் பேரூராட்சி அலுவலகம் அருகே, தனியார் பிரைமரி மற்றும் நர்சரி பள்ளி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை சந்திரசேகர் பள்ளியை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை பள்ளிக்கு சென்றபோது, ஓடுகளால் ஆன பள்ளி அலுவலகத்தின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, லாக்கரில் வைத்திருந்த ரூ.28 ஆயிரம் மற்றும் வெள்ளியால் ஆன சரஸ்வதி சிலை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகசாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்