நாகநாதர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
நாகநாதர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
நயினார்கோவில்,
பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் உள்ள நாகநாதர் கோவில் தமிழகத்தில் உள்ள ராகு தலங்களில் ஒன்றாகும். இந்தகோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர் உள்ளே புகுந்துள்ளான். அவன் கோவில் உண்டியலில் உள்ள இரண்டு பூட்டுக்களையும் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று விட்டான். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். ேமலும் இதுகுறித்து நயினார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.