ரூ.40 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்

ராமநாதபுரம் அருகே தந்தையின் கணக்கிற்கு மகன் அனுப்பிய ரூ.40 ஆயிரம் மாயமான நிலையில் சைபர்கிரைம் போலீசார் மீட்டு கொடுத்தனர்.

Update: 2022-06-02 17:29 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் அருகே தந்தையின் கணக்கிற்கு மகன் அனுப்பிய ரூ.40 ஆயிரம் மாயமான நிலையில் சைபர்கிரைம் போலீசார் மீட்டு கொடுத்தனர்.

ரூ.40 ஆயிரம்

மண்டபம் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் தினேஷ்குமார் (வயது19). கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் தனது தந்தையின் வங்கி கணக்கிற்கு கடந்த மாதம் 12-ந் தேதி ஆன்லைன் மூலம் ரூ.40 ஆயிரம் பணம் அனுப்பி உள்ளார். அந்த பணம் அவரின் தந்தையின் வங்கி கணக்கிற்கு செல்லாத நிலையில் இவரின் கணக்கில் இருந்து கழிந்து உள்ளது.

இணைய தடங்கலாக இருக்கும் என்று 24 மணி நேரம் வரை காத்திருந்த தினேஷ்குமார் அதன் பின்னரும் தனது பணம் திரும்ப வராததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் தலைமையிலான போலீசார் அந்த பணம் என்ன ஆனது என்பது குறித்து வங்கியை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் அந்த பணம் தவறுதலாக பாண்டிச்சேரியை சேர்ந்த இறந்துபோன ராஜம் என்பவரின் திருவாடுதுறை பகுதி வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அந்த வங்கியினரை தொடர்பு கொண்டு தினேஷ்குமாரின் பணம் குறித்து உரிய ஆதாரங்களுடன் விளக்கி கூறி ரூ.40 ஆயிரம் பணத்தை மீட்டனர். இந்த பணத்திற்கான ரசீதினை தினேஷ்குமாரிடம் நேற்று சைபர்கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வழங்கினார்.

பாராட்டு

அப்போது சைபர்கிரைம் சப்-இன்ஸ்பெக்டர்கள் திபாகர், ரிச்சர்ட்சன் ஆகியோர் உடன் இருந்தனர். ஆன்லைன் மூலம் தந்தையின் வங்கி கணக்கிற்கு அனுப்பிய பணம் என்ன ஆனது என்று தெரியாமல் தவித்த வாலிபருக்கு சைபர்கிரைம் போலீசார் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தீவிர விசாரணை நடத்தி மீட்டு கொடுத்ததை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்