நாகர்கோவிலில் ஜெபக்கூடத்தில் பணம்-மடிக்கணினி திருட்டு

நாகர்கோவிலில் ஜெபக்கூடத்தில் பணம்-மடிக்கணினி திருடப்பட்டது.

Update: 2023-04-22 18:45 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் ஜெபக்கூடத்தில் பணம்-மடிக்கணினி திருடப்பட்டது.

திருட்டு

நாகர்கோவில் மாவட்ட ஜெயில் அருகே உள்ள சந்திப்பில் ஒரு ஜெபக் கூடம் உள்ளது. சம்பவத்தன்று இரவு ஜெபக்கூடத்தை வழக்கம் போல பூட்டி விட்டு சென்றனர். பின்னர் மறுநாள் வந்து பார்த்த போது ஜெபக்கூடத்தின் முன்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது. பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. மேலும் ஜெப கூடத்தில் மேஜையில் வைத்திருந்த ரூ.3,200 மற்றும் ஒரு மடிக்கணினி ஆகியவற்றை காணவில்லை. இரவில் யாரோ மர்ம நபர்கள் ஜெபக்கூடத்துக்குள் புகுந்து திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் ஜெபக்கூட மேலாளர் இம்மானுவேல் ஜெபராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்