பண மோசடி புகார்: நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகை

பண மோசடி புகாரில் சிக்கிய நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-07-05 22:28 GMT

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே அமுதசுரபி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் ஏராளமானவர்கள் சீட்டு பணம் கட்டி உள்ளனர். இந்த நிலையில் பண மோசடி செய்ததாக கூறி நிதிநிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் பலர் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இது குறித்து அவர்கள் கூறும் போது, 'நிதி நிறுவனத்தில் தினசரியாகவும், ஒவ்வொரு மாதமாகவும் சீட்டுக்கு பணம் கட்டினால் இறுதியில் அதிக வட்டியுடன் சேர்த்து அதிக பணம் திரும்ப தருவதாக நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கூறினர். இதை நம்பி ஏராளமானவர்கள் பணம் கட்டினோம். ஆனால் முதிர்வு காலம் முடிந்தும் கட்டிய பணம் திரும்ப தரவில்லை. இது குறித்து நிறுவனத்தினரிடம் கேட்டால் சரியான பதில் இல்லை. கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்து உள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கட்டிய பணத்தை திரும்ப தரும் படி கூறி போராட்டம் நடத்தி வருகிறோம்' என்று கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்