பெண்ணிடம் ரூ.15 ஆயிரம் மோசடி

பெண்ணிடம் ரூ.15 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.

Update: 2023-05-10 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை அருகே உள்ள டி.கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் கலாராணி (வயது 42). இவர் சம்பவத்தன்று திருவாடானை வடக்கு தெருவில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது பணம் எடுக்க உதவி செய்வது போல் நின்றவர், கலா ராணியிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கிய பின் பணம் வரவில்லை என கார்டை திருப்பி கொடுத்துள்ளார். சில நிமிடங்களில் கலாராணியின் வங்கி கணக்கிலிருந்து ரூ.15 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனிற்கு மெசேஜ் வந்தது. ஏ.டி.எம்.ல் பணம் எடுத்து கொடுக்க உதவியதுபோல் நடித்த அந்த மர்ம நபர் கலா ராணியின் ஏ.டி.எம். கார்டுக்கு பதிலாக வேறு கார்டை கொடுத்து ஏமாற்றி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்