ஆத்தூரில் நிதிநிறுவனம்மோசடி செய்தபணத்தைகோர்ட்டில் பெறலாம்: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்
ஆத்தூரில் நிதிநிறுவனம்மோசடி செய்தபணத்தை திரும்ப பெறாதவர்கள், கோர்ட்டில் பெறலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் 1992 முதல் 2002 வரை இயங்கி வந்த ராமகிருஷ்ணா பைனான்ஸ் மீதான வழக்கு தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்து. இந்த வழக்குதற்போது மதுரை சிறப்பு பொருளாதார நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிதிநிறுவனத்தில் முதலீடு செய்து, பணத்தை திரும்ப பெறாமல் இருக்கும் வாடிக்கையாளர்கள் 7 பேரின் டெபாசிட் தொகை மதுரை சிறப்பு பொருளாதார நீதிமன்றத்தில் உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்டவர்களோ அல்லது வாரிசுகளோ 15 நாட்களுக்குள் தகுந்த ஆவணங்களுடன் கோர்ட்டில் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பகிறார்கள்.
இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார்.