ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் பணம், நகைகள் திருட்டு

மேலூர் பகுதியில் ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் பணம், நகைகள் திருடப்பட்டன.

Update: 2023-04-02 20:20 GMT

மேலூர், 

மேலூர் பகுதியில் ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் பணம், நகைகள் திருடப்பட்டன.

நகை, பணம் திருட்டு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சிவகுமார் என்பவரது மனைவி மலர்விழி (வயது 42). இவர் 8 ஆயிரம் ரூபாய், ஒரு பவுன் தங்க சங்கிலி, 7 கிராம் 2 தங்க மோதிரங்கள், ஏ.டி.எம்.கார்டு ஆகியவற்றை மணிபர்ஸ் ஒன்றில் வைத்து அதை கட்டைப்பையினுள் போட்டு வைத்துள்ளார்.

அதோடு சிங்கம்புணரி செல்வதற்காக மேலூரில் பஸ்சில் ஏறியபோது அவரது நகை மற்றும் பணம் திருடுபோனது. இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.57 ஆயிரம் அபேஸ்

அதேபோல மற்றொரு திருட்டு சம்பவம் நடந்து உள்ளது. மாத்தூரை சேர்ந்தவர் பாண்டிச்செல்வி (40). இவர் அப்பன்திருப்பதி கிராமத்தில் உள்ள வங்கிக்கு சென்றுவிட்டு ரூ.57 ஆயிரத்தை கட்டைப்பையில் வைத்துள்ளார். அதன்பின்னர் டவுன் பஸ்சில் மேலூருக்கு வந்த போது பாண்டிச்செல்வி கட்டைப்பையில் வைத்திருந்த ரூ.57 ஆயிரம் திருடு போனது. யாரோ அதை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்