மின்கேபிள் பதிப்பது குறித்து முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு

நாகூர் தர்காவை சுற்றி மின்மாற்றியை அகற்றி விட்டு தரைவழியாக மின்கேபிள் பதிப்பது குறித்து முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

Update: 2023-01-17 18:45 GMT

தர்காவை சுற்றியுள்ள மின்மாற்றிகளை அகற்றிவிட்டு தரைவழி மின் கேபிள் பதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. நாகூர் தர்காவுக்கு வந்தார். பின்னர் தர்காவை சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிட்டு, தரைவழியாக மின்கம்பிகள் பதித்திட உள்ள சாத்திய கூறுகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நாகை நகராட்சி துணை தலைவர் செந்தில் குமார், நாகூர் முஸ்லிம் ஜமாத் தலைவர் சாஹாமாலிம் மற்றும் நாகூர் தர்கா ஆலோசனை குழு தலைவர் கலீபா சாஹிப் உள்பட பலர் உடனிருந்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்