மோடி மீண்டும் பிரதமர் ஆவார்

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்று வேலூர் இப்ராகிம் கூறினார்

Update: 2022-06-04 15:31 GMT


பொள்ளாச்சி

பா.ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்தநாளையொட்டி பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளை யம் தர்காவில் கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் தலைமையில் கூட்டு பிரார்த்தனை நடை பெற்றது. பின்னர் அவர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக பா.ஜனதா தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பதற்றம் அடைந்து உள்ளன.

தமிழகத்தில் ஊழல், குடும்ப ஆட்சி என்ற கொடிய நிலையில் இருந்து மாற்றத்தை கொண்டு வந்து மக்களாட்சி, சமத்துவம், சமூக நீதி, சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பு கொண்டுவர அண்ணாமலை முயற்சி செய்து வருகிறார்.

ஊழலற்ற, உண்மையான, நிலையான, சமத்துவம் மிக்க ஆட்சியை வழங்க 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 இடங்களை பிடித்து மீண்டும் மோடியை பிரதமராக அமர வைக்கும் தமிழகத்தின் பங்கு இருக்கும்.

இவ்வாறு அவர்  கூறினார்.

மேலும் செய்திகள்