மோடி, அமித் ஷாவின் கூண்டுக்கிளிதான் சி.பி.ஐ - உத்தவ் தாக்கரே கட்சி கடும் விமர்சனம்

மோடி, அமித் ஷாவின் கூண்டுக்கிளிதான் சி.பி.ஐ - உத்தவ் தாக்கரே கட்சி கடும் விமர்சனம்

Update: 2023-04-06 13:33 GMT

மும்பை

மோடி, அமித் ஷாவின் கூண்டுக்கிளி தான் சி.பி.ஐ. என சாம்னாவில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்க சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற மத்திய முகமைகளை தவறாக பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த மாதம் எதிர்க்கட்சியை சேர்ந்த 9 தலைவர்கள் சி.பி.ஐ., அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தப்படுவதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி ஒருவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அதிகாரிகள் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருந்தார். நாட்டை ஊழல் அற்றதாக கட்டமைக்க சி.பி.ஐ. போன்ற அமைப்பு அவசியம் எனவும் கூறியிருந்தார்.

இந்தநிலையில் சி.பி.ஜ. மோடி, அமித்ஷாவின் கூண்டுக்கிளி என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் விமா்சிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- யார் ஊழல் செய்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோடி கூறுகிறார். அவர் இதுபோன்ற அறிவுரை கூறினாலும், சி.பி.ஐ. மோடி மற்றும் அமித்ஷாவின் கூண்டுக்கிளி என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்